Loading Events

« All Events

  • This event has passed.

October 02 Ostomy Day Program celebrated at Harshamitra Cancer Centre, Trichy

October 2, 2017 @ 10:30 am - 12:30 pm

அக்டோபர் 02 . உலக ஆஸ்டமி தினம். மலக்குடல்  அல்லது  சிறுநீர் பையில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அந்த பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு நிரந்தரமாக மலம்  அல்லது சிறுநீர் கழிக்க வயிற்றுப் பகுதியில்  ஒரு துவாரம் அமைக்கப்படும். இதுவே ஆஸ்டமி என்று அழைக்கப்படும். உலக ஆஸ்டமி தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கான ஆஸ்டமி பராமரிப்பு பயிற்சி மற்றும் ஆஸ்டமி  நோயாளிகளுக்கான சிறப்பு முகாமினை திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சி ஆஸ்டமி அசோசியேசன் இணைந்து, கடந்த  ஏழு  வருடங்களாக நடத்தி வருகிறது. அதனைப் போன்றே இந்த ஆண்டும் ஆஸ்டமி தினம் திருச்சி ஹர்ஷமித்ரா  மருத்துவமனையில்  ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குடல் நோய்  அறுவை சிகிச்சை நிபுணர். டாக்டர்.விஜய் ஆனந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,செவிலியர்களுக்கு ஆஸ்டமி பராமரிப்பு பற்றி விளக்கினார். தொடர்ந்து ஸ்டோமா தெரபிஸ்ட் திரு.கீர்த்திவாசன்  அவர்கள் நோயாளிகளுக்கு ஆஸ்டமி பற்றிய செயல்முறையை விளக்கினார்.

ஹர்ஷமித்ரா  மருத்துவமனை மேலாண் இயக்குனர் டாக்டர்.கோவிந்தராஜ் அவர்கள் விருந்தினர்களை வரவேற்று  ஆஸ்டமி  பற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான  செவிலியர்களும், ஆஸ்டமி நோயாளிகளும் அவரது உறவினர்களும் கலந்து கொண்டு சந்தேகங்களை கேட்டு, தெளிவு பெற்றனர்.

Click Here For Images,

Details

  • Date: October 2, 2017
  • Time:
    10:30 am - 12:30 pm
  • Event Category:

Organizer

  • Rose Garden Charitable Trust & Harshamitra Cancer Centre, Trichy

Venue

  • Harshamitra cancer centre, Trichy