முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஹர்ஷமித்ரா பல்நோக்கு மருத்துவமனை, தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட், ஜோசப் கண் மருத்துவமனை, பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் பெரியார் மருந்தியல் குழுமம் ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை நடத்தின.
தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த முகாம், 22.08.2026 (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் நடைபெற்றது.
முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு சிறப்பு துறை மருத்துவர்களின் ஆலோசனையுடன் இலவச மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட்டன. மேலும், கண் பரிசோதனை, புற்றுநோய் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் இடம்பெற்றன.
பொதுமக்களின் நல்ல வரவேற்புடன் நடைபெற்ற இந்த முகாம், சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதிலும் பயனுள்ளதாக அமைந்தது.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை தொடர்ந்து இதுபோன்ற சமூக நல மருத்துவ சேவைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.







