நாகமங்கலம், திருச்சியில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், Rose Garden Institute of Paramedical Education & Research (RIPMER) உடன் இணைந்து தெர்மோகிராம் பயிற்சி நிகழ்ச்சி (Thermogram training program) நடைபெற்றது.
பங்கேற்பாளர்களுக்கு தெர்மோகிராபி தொழில்நுட்பம் (Thermography technology), தெர்மல் இமேஜிங் நடைமுறைகள் (Thermal Imaging Procedures), படங்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் மருத்துவத் துறையில் தெர்மல் இமேஜிங்கின் பயன்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சி மூலம் பங்கேற்பாளர்கள் தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் அதன் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து அறிவையும், செயல்முறை அனுபவத்தையும் பெற்றனர்.
இந்நிகழ்ச்சி DITI India, Chennai நிறுவனத்தின் CEO A.M. Shahul Hameed அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாகம் மற்றும் RIPMER கல்விக் குழுவினரின் ஆதரவுடன் பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தெர்மல் இமேஜிங் தொழில்நுட்பம் குறித்த அறிவையும் நடைமுறைப் பயிற்சியையும் மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி அமைந்தது.






